Breaking News

14 வயது சிறுமியை பெட்ரோல் ஊத்தி எரித்த மனிதமிருகங்கள்

14 வயது சிறுமியை பெட்ரோல் ஊத்தி எரித்த மனிதமிருகங்கள் – காட்டு மிருகங்கள் கூட அதோட இனத்தை இப்படி கொடூரமா செய்ய துணியாது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து ஜெயஸ்ரீ என்ற 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டு பெட்ரோல் ஊத்தி எரித்துள்ளான் அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன்.
இது பெட்டிகடைகாரருடன், ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக நடப்பட்டது என கூறுகின்றனர். அந்த சிறுமியின் தந்தை ஜெயபால் பெட்டிகடை வைத்து வியாபாரம் பண்ணுகிறார். ஊரடங்கு காரமாக காவல்துறை கூறிய நேரம் மட்டுமே கடை திறந்து வைத்து வியாபாரம் பண்ணுவதும், அனுமதிக்காத நேரத்தில் கடையை அடைப்பதும் வழக்கம்.
கவுன்சிலர் முருகன் குடிபோதையில் முடிய கடையை திறக்க சொல்லி பொருள் கேட்க, சிறுமி கடைய திறக்க மறுக்க, சிறுமியை அடித்துத்துள்ளான். இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இவர்களை பழிவாங்கும் விதமாக வீட்டில் யாரும் இல்லாத போது, அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாளும், முன்னாள் கவுன்சிலர் முருகனும் இந்த சிறுமியின் கைகளை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊத்தி எரித்துள்ளார்கள்.
சிறுமியின் உடல் பாதி கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமியின் நிலைமை ரெம்ப கவலைக்கிடமாக இருக்கு.
இந்த சிறுமியின் வீடியோவ பார்த்தாலே நெஞ்சம் பதறுது. உடல் தோல்கள் கருகிய நிலைல “அப்பா எங்க”னு கேக்கும் போது இந்த காவல்துறையில் அரசு சம்பளம் வாங்குறவுங்க என்ன செஞ்சிட்டு இருக்காங்க னு தெரியல. இந்த சிறுமி கருகிய நிலைமையில வாக்குமூலம் குடுத்தும் எந்த வேசி ஊடமும் நேற்று செய்திய வெளியிடல. அப்புறம் எதுக்குத்தான் இவுங்க இருக்காங்க..?
சட்டமும் தெரியாது, சமூக அக்கறையும் கிடையாது வாங்குற சம்பளத்துக்காவது நடவடிக்கை எடுக்குமா னு பார்ப்போம். இந்த வெறிபிடிச்ச கவுன்சிலர் முருகனுக்கும், கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாளுக்கும் கொடுக்குற தண்டனை இனி கட்சிய வச்சி திமிர் திமிர்தனம், சல்லித்தனம் பண்ற, எல்லா வெண்ணெய்களுக்கும் பாடமா இருக்கணும்.
கொடுக்குற தண்டனை கொடுமையா இருக்கணும், இதுல எல்லாம் மனித உரிமை மயிரு உரிமை னு பாக்கக்கூடாது. இவனுக்கெல்லாம் வழக்கு மயிரு நடத்த தேவையில்ல, தண்டனையை மட்டும் அறிவியுங்க.. காவல்துறையும் நீதிதுறையும் மக்கள் காரித்துப்பி, சாணி அடிக்குற மாதிரி நடந்துகொள்ளவேண்டாம்..