Breaking News

யாழில் பரவலாக வாள்வெட்டு!! ஒருவர் பலி, மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமடு பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி கை துண்டான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் காலை 10 மணியளவில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதல் வாள் வெட்டு வரை சென்றுள்ளது.
இதன் போது 31 வயதுடைய ஒருவரது கை துண்டாகும் வகையில் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இப்பகுதியில் ஏற்ப்பட்ட சிறு தகராறு இன்று குழு மோதலாக மாறியுள்ளது.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வாள் வெட்டுக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சவகச்சேரி கரம்பன் வடக்கு பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ள மோதலில் 40 வயதான விஜயகுமார் என்பவரே பலியானதாக தெரியவருகின்றது,
மேலும் படுகாயமடைந்த இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …