Breaking News

வாய்பேச மிருகத்தை வாளால் குத்தி கொலை செய்த பாவிகள்!!

முல்லைத்தீவு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் வீட்டு காணிக்குள் நுளைந்த பசு மாட்டினை வாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
02.05.2020 அன்று முல்லைத்தீவு மாணிக்கபுரம் பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வரும் பசுமாட்டினை மேச்சலுக்காக அவிட்டு விட்டுள்ளார்.
கடும் வெய்யிலில் பசியால் அலைந்த மடு மாணிக்கபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படலை திறந்திருந்த நிலையில் வீட்டிற்குள் சென்று நிலக்கடலை தோட்டத்தில் மேய்ந்துள்ளது.

குறித்த வாய்பேசா மிருகத்தினை அடித்து கலைப்பதை விடுத்து வீட்டில் இருந்த வாளால் மாட்டின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார்கள். இதனால் இரத்தம் சீறிப்பாய்ந்த மடு ஒடிவந்து தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
95 ஆயிரம் ரூபா மதிப்பிலான வயிற்றில் மூன்று மாத கன்றினை சுமந்த மாடு கதறி நிலத்தில் வீழ்ந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்றபோது மாடு உயிரிழந்து காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கால்நடையின் உரிமையாளர் உயிரிழந்த மாட்டிற்கு நீதிகோரி புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதுடன் சம்மந்தப்பட்ட நபரை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இன்னிலையில் 03.05.2020 காலை குறித்த நபர் பொலீஸ் பிணையில் விடுதலையாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவாளிக்கும் பொலீசாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் உயிரிழந்த மாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சட்டத்தரணியை நாடியுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …