Breaking News

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பிடுங்க முற்பட்ட சட்டத்தரணி!! நடந்தது என்ன??

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்துள்ள உள்வீட்டு முறுகளில் மல்லாகம் நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா இலக்கு வைக்கப்பட்டுள்ளரா? என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மாவீரர் தினம் அனுஷ்டித்தமை தொடர்பான படம் ஒன்றைக் காண்பித்து கடந்த வாரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது அந்தப் படத்தில் மல்லாகம் நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜாவும் சட்டத்தரணி மணிவண்ணனும் இணைந்து மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமைக்கான படமாகவே அது காணப்பட்டது.
அந்தப் படத்தில் உள்ள நீதிபதி நிகழ்வில் பங்கேற்றாரா? என்பதாகவே பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணை அமைந்தது.
மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிஸ்தராக உள்ள சட்டத்தரணி சுகாஸூக்கும் சட்டத்தரணி மணிவண்ணனுக்கும் இடையே நீண்ட பனிப்போர் நிலவுகின்றது.
இதனால் ஏற்கனவே நீதிவான் அலெக்ஸ்ராஜா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் அவரது தரப்பினர், சட்டத்தரணி மணிவண்ணனையும் அலெக்ஸ்ராஜாவையும் இணைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு படத்தை அனுப்பியிருக்க முடியும் என்று நம்மப்படுகிறது.
இதன்மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற இலக்கை சட்டத்தரணி சுகாஸ் தரப்பினர் எதிர்பார்த்திருக்க முடியும் என அறியமுடிகிறது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …