Breaking News

யாழில் குழந்தை பேற்றிற்காக சென்ற தாய்க்கு நேர்ந்த விபரீதம்

முதலாவது குழந்தை பேற்றிற்காக வைத்தியசாலை சென்ற பெண் தனது இடது காலினை முற்றாக இழக்கும்?? நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த 26ம் திகதி மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
இத்துயர சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 26ம் திகதி மாலை முதலாவது குழந்தை பேற்றின் தீவிர நிலையில் 38வயதான குமாரவடிவேல் சிவனேஸ்வரி எனும் பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பேற்றினை மேற்கொள்ள முடிவெடுத்த வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையின் நிலை தடம்மாறி இருந்ததனால் குழந்தையின் உயிரை காக்க போராடிய நிலையில் தாயின் இடது காலிற்கு குருதியை கொண்டு செல்லும் குருதிக்குழாய் முற்றாக அறுந்துள்ளது.
இதனால் தாய்க்கு அதீத குருதி பெருக்கு ஏற்பட்ட நிலையில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
பின்னர், பல தனித்தனி திறமை வாய்ந்த வைத்திய நிபுணர்கள் இணைந்து தாயின் உயிரையும் காலையும் காப்பாற்றுவதற்காக சுமார் 8மணித்தியாலங்களிற்கு மேலாக சத்திர சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தாயின் உயிர் மற்றும் கால் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக தாய் அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, சில சந்தர்ப்பங்களில் சிகிச்சை பலனின்றி போனால் இடது காலானது முற்றாக அகற்றப்படலாம் என உறவினர் மற்றும் கணவனாரிடம் எழுத்துமூல சம்மதம் வேண்டப்பட்டிருந்ததாகவும் இதனால் உறவினர்களிடையே குழப்ப நிலை நிலவியதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் மிகவும் திறமையானவர் என்றும் பல சத்திர சிகிச்சைகளை சுலபமாக செய்து முடிப்பவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான துயர சம்பவங்கள் மிக அரிதாகவே நிகழ்வதாகவும் தாயின் வயிற்றில் குழந்தையின் நிலை தடம்மாறி இருத்ததனால் இது ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் முதலாவது குழந்தையை பெற்ற தாய் தன் சேயுடன் பூரண சுகத்துடன் நலமாக திரும்பிவர வேண்டும் என பிராத்திப்போம்.
தகவல். உறவினர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …