Breaking News

மேலும் 18பேரிற்கு கொரோனா!!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 63 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
120 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
396 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …