Breaking News

யாழில் பண வசூலிப்பில் ஈடுபட்ட நிதி நிறுவனம்!? விசனத்தில் மக்கள்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் உத்தரவுகளை மீறி சில நிதி நிறுவனங்கள் பண வசூலிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் யாழ் நெல்லியடி commercial leasing நிறுவனத்தில் கடன் பெற்று கொண்டவர்களின் வீடுகளுக்கு சென்ற சிலர் இந்த மாதம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என சொல்லி இருக்கின்றார்கள்.
இதற்கு மக்கள் எங்களுக்கு இப்ப தொழில் வாய்ப்பு இல்ல இப்ப கட்ட முடியாது என்று சொன்னதுக்கு அது எல்லாம் முடியாது எங்கட நிறுவன உயர் அதிகாரிகள் கட்டாயம் பணத்தை வசூலிக்க சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் may 5 திகதிக்கு முன்னர் பண்த்தை செலுத்த வேண்டும் என்றும் ஏப்ரல் மாத கட்டுப்பணத்தை மட்டும் பகுதியாக செலுத்தலாம் என்று சொல்லி அனைவரிடமும் பாத்திரம் ஒன்றை கொடுத்து அதில் கையொப்பம் வாங்கி சென்று இருக்கிறார்கள்.

கடன் பெற்ற மக்கள் அதிகமாக கூலி தொழில் செய்பவர்கள், ஒருசிலர் தனியார் கடைகளில் நாட்கூலி சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள்.
அவர்கள் ஆக கூடுதலாக பெற்ற கடன் தொகை ஒரு லட்சம் ருபாய் என தெரியவருகின்றது.

மக்கள் நாளாந்த சாப்பாட்டிற்கே கஷ்டமான சூழலில் இருக்கும் இக்கால கட்டத்தில் இப்படி பணத்திற்காக மக்களை மேலும் கஷ்டப்படுத்துவது உரிய அதிகாரிகளிற்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் தற்கால சூழ்நிலையினை உணர்ந்து மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுமாறு சமூக அக்கறையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பாக தங்கள் நிறுவனம் எதுவும் தகவல் தர விரும்பின் [email protected] எனும் எமது மின்னஞ்சலுடன் தொடர்பினை மேற்கொள்ளலாம்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …