Breaking News

பேருந்தில் வந்த படையினர் ஒருவரிற்கு கொரோனா!! இராணுவ சிப்பாய் மயங்கி விழுந்து பலி!!

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத் தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிரு க்கின்றது.
இதேவேளை உயிரிழந்த சிப்பாய் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த28 வயதானவர் என கூறப்படுகின்றனர்.
இவருக்கு இம்மாதம் தொடக்கத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய் முகாமில் தனிமைப் படுத்தலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய் முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது.
இதனால் குறித்த இராணுவச் சிப்பாயின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பிற்கு கொரோனா காரணமாக எனக் கண்டறியும் நோக்கில் மாதிகரிள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் உடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினரில் சுமார் 60 பேர் விடுப்பில் நின்று கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்கு மீளத் திரும்பிய நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்படுகின்றனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அவர்கள் திரும்பிய பேருந்தில் பயணித்த வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படைச் சிப்பாய்க்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 60 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அந்தப் பேருந்தில் விடுப்பில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார். அவர் அநுராதபுரம் சிறிபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்தப் பேருந்து வெலிஓயா, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 60 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர்.
அவர்களை இனங்கண்டு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தலில் வைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு பேருந்தில் வந்தவர்கள் எந்ததந்த இடங்களில் தரித்து நின்றனர், கடைகளுக்குச் சென்றனரா? உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …