Breaking News

யாழில் கொரோனாவை விலைகொடுத்து வாங்க முற்படும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை!? கலவரத்தில் ஊழியர்கள்

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேக நபர் ஒருவரை சாதாரண விடுதியில் அனுமதித்தமையால் நோயாளர்கள், ஊழியர்கள் மத்தியில் குழப்பநிலை ஒன்று தோன்றியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் யாழ் நாவற்குளி வீட்டுத்திட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் யாழில் கொரோனா பரவ மூலகாரணமான சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்குபற்றியவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தமை இனம்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்தும் கொரோனா பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள யாழ் போதன வைத்தியசாலைக்கு குறித்த நபரை நேற்று நண்பகலில் இருந்து மாற்றம் செய்யாமல் வைத்துள்ளமை பல்வேறு மட்டங்களில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …