Breaking News

பொருட்களை வினியோகம் செய்தவரிற்கும் கொரோனா

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பல்பொருட் அங்காடியின் பொருள் விநியோகஸ்தர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் இவர் தற்போது தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோது, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பொருள் விநியோகஸ்தராக இருந்தமையினால், அவருடன் தொடர்புபட்டிருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதேவேளை, நேற்று வெலிசறை கடற்படை முகாமில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள், அண்மையில் ஜா எல, சுதுவெல பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
போதைவஸ்துடன் தொடர்புடைய குழுவினால் அந்த பகுதியில் ஏற்பட்ட தொற்று அபாயத்தையடுத்து, கடற்படையினர் களமிறக்கப்பட்டு, பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.