Breaking News

சுவிஸ் போதகரினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இறுதி பரிசோதனை அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்..!

பிந்திய செய்தி…
சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய நிலையில் பலாலி தனிமைப்படு த்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 20 போில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மிகுதி 4 பேருக்கு தொற்றிலிருந்து தப்பியுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த 4 பேருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள வர்களுக்கு உணவு வழங்கிய 4 இராணுவத்தினருக்குமாக 8 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் 8 பேருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் மருத் துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் இன்று கொரேனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 23 போில் ஒரு வருக்கும் கொரோனா தொற்று இல்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர், யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பை சேர்ந்த 4 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 8 பேர், தெல்லிப்பளை சுகாதார பிரிவுக்குட்பட்ட 8 பேர் என 27 பேர் பரிசோதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் எவருக்கும் தொற்றுள்ளில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னய செய்தி…
யாழ்.அரியாலை மதபோதகருடன் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 பேருக்கான பரிசோதனைகள் இன்றுடன் நிறைவடைவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சுவிஸ் போதகருடன் பழகிய நிலையில் வடக்கு மாகாணத்தில் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த 2ம், 3ம் கட்ட பரிசோதனைகள் நடாத்தப்பட்டது.
இந்த பரிசோதனையின் இறுதி நாள் இன்றாகும். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 4 பேர் உள்ளடங்கலாக தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கான இறுதிக் கட்ட பரிசோதனை இன்று நடாத்தப்படுகின்றது.
இன்றைய பரிசோதனையில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படாத விடத்து சுவிஸ் போதகரால் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்கள் விடயம் நிறைவுக்கு வரும். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்த 1200ற்கும் மேற்பட்டவர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ளனர்.
அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் நிலையில் கட்டாயம் பரிசோதிக்கப்படவேண்டியவர்களுக்கு மிக விரைவில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேல்லும் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …