Breaking News

கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது!

வவுனியா – ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் பேருந்தும் வானும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற நபரும் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது 29) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான அரச பேருந்தின் சாரதியும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தற்போது ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (24.02) காலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது.

காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீவைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

இரு வாகனங்களும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *