Breaking News

பேரழிவை சந்திக்கப்போகும் இலங்கை?? அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியானது.

கொரோனா தொற்றுள்ள ஒருவருடன் அரை மணித்தியாலங்கள் மட்டுமே உரையாடிய ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று ஒருமாதம் கழிந்தும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளபோது யாழில் இருந்து கண்டிக்கு அரச பேருந்தில் சன நெரிச்சலுடன் போக்குவரத்து ஏற்பாடு வெற்றிகராமாக நடைபெறுகின்றது.
இத்தோடு நிற்காமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும் வெறும் காய்ச்சல் பார்க்கும் கருவியை கொண்டு பரிசோதித்த பின்னர் உட்செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய இலங்கையில் ஊரடங்கு தளர்வு 50:50 அதாவது ரிஸ்க். இன்னும் ஒர் 15 நாட்கள் நீடித்திருக்கலாம்.
பொருளாதாரம் கீழ்நிலை தான் ஆனாலும் பாதுகாப்பு முக்கியமே.தளர்வு சிலநேரம் சாதகமாகலாம் சில நேரம் பாதகமாகலாய் ஆனாலும் ஆகலாம்.
பொறுப்புள்ள குடிமக்களாகிய எல்லோரும் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் தான் வெளியே செல்லுங்கள்.பெருங்குடிமக்களும் சமூக இடைவெளி பேணவும்.

ஒருமாதமாக வறட்சியை ஒரேயடியாக தீர்க்காமல் அமைதியாக கடமையை நிறைவேற்றுஙகள்.
சிறுவர்களே முதியோர்களே தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள் நோய் தாக்கம் இன்னும் எங்கள் நாட்டை விட்டு போகவில்லை என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
உங்களை நீங்களே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எங்கயும் மக்கள் கூடும் இடங்களில் நிற்காதீர்கள் எந்த நேரம் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.

வெளியில் போய் வந்ததும் உங்களுடைய கைகளை முகங்களை கால்களை நன்றாக அல்ககோல் உள்ள கிருமிநாசினி பாவித்து கழுவவும் சுகாதாரத்துறையினர் உடைய ஆலோசனைகளை பின்பற்றவும் .
நாட்டுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் தான் மீண்டும் ஊரடங்குச் சட்டம் போடாமல் அரசாங்கம் செயல்படும்.
இதேவேளை, இன்றுமட்டும் கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர்   (ஏப்ரல் 20) திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 24 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 295ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 24 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
96 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
192 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …