Breaking News

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் குணமடைந்து திரும்பினர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நால்வர், குணமடைந்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் இன்று யாழ்ப்பாணம் திரும்பினர்
இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்புலன்ஸில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் வீடுகளில் இறக்கிவிடப்பட்டனர்.
அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த ஒருவரும் முள்ளியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை அவர்களது வீடுகளுக்கு அம்புலன்ஸ் வண்டி ஊடாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.