Breaking News

இராணுவச் சிப்பாயொருவருக்கு கொரோனா; 200ற்கும் மேற்பட்டோருடன் பழகியதாக தகவல்!!

இலங்கை இராணுவத்தின் அனுராதபுரம் பொறியியல் பிரிவின் சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக வீடு வந்த சமயம் கொரோனா நோய்த் தொற்று இருக்க அடையாளம் காணப்பட்டார்.

சாலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவிசாவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் நேற்றிரவு கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து அவர் சென்ற சாலாவ, அவிசாவளை வைத்தியசாலைகளில் அவருக்கு சிகிச்சையளித்த தாதியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவருக்கு எங்கே எப்போது யார் மூலம் தொற்று பரவியது என்பதை கண்டறிய விசாரணைகள் நடக்கின்றன. சுமார் 200 பேருக்கும் மேற்பட்டோருடன் அவர் பழகியுள்ளதால் அவர்கள் தொடர்பிலும் தேடப்படுகின்றன.
இதனையடுத்து சிப்பாய் வசித்த அவிசாவளை கஹாஹேன பகுதியிலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் தரப்பு தயாராகி வருகிறது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …