Breaking News

கொரோனா தொற்று சந்தேகம்!! தனிமைப்படுத்தலில் சிற்றூளியர்களை புறம்தள்ளிய வைத்தியசாலை

கொரோனா வைரஸ் சம்பளம் கூடியவரைதானா தாக்கும் எங்களுக்கு தொற்றாதா?? இப்படியொரு போராட்டம் இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில்!!!
இலங்கையின் நீர்கொழும்பு வெலிசறை வைத்தியசாலை சூழலை சுற்றி பாரிய ஆர்ப்பாட்டம் எதிரொலித்தது .
“வைத்தியர்களும் ‘தாதியர்களும்தான் மனிதர்களா ”
“சம்பளத்தின் தொகையை கண்டறிந்தா கொரோனா வைரஸ் தொற்றும்”
“வைத்தியரும் தாதியர் மாத்திரம்தான் சுகதார ஊழியர்களா???”
இப்படி பல குரல்கள் ஆர்ப்பாட்டத்தில் எதிரொலித்தது .
இந்த ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் வேறு யாருமில்லை வெலிசறை வைத்தியசாலை சுகதார சேவை உதவியாளர்கள் (சிற்றூழியர்)
இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய காரணம் என்ன அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் எதிரொலித்த குரலில் ஆதங்கமும் ஒருவகையில் நியாயமானது .
வெலிசறை வைத்தியசாலை சுவாசம் சம்மந்தமான நோயாளிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட 15ம் மருத்துவ விடுதியிலிருந்து நோயாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனா எனும் சந்தேகத்தில் அதில் கடமை புரிந்த வைத்தியர் ,தாதியர்,சுகதார உதவியாளர்களை அம்பிலன்ஸ் வண்டியில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு சென்ற வேளை தாதியரையும் வைத்தியர்களை தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதித்துவிட்டு சுகதார உதவியாளர் உத்தியோகத்தர்களை திருப்பி அனுப்பியுள்ளார்கள் .
இந்த செய்கையை கண்டித்து விசனமடைந்து வைத்தியசாலை சூழலில் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது .
வைத்தியசாலை சிகிச்சை என்பது ஒரு team work ஒரு வைத்தியர் தாதியர், சுகதார உதவியாளர்கள் ,ஆய்வுகூட தொழினுட்பவியலாளர்கள் கொண்ட எல்லோரின் கூட்டு முயற்சியாகும் .ஒரு தரப்பை தவிர்த்து நோயாளிக்கு சுகதார சேவை வழங்க முடியாது.
அனைத்து சுகாதார ஊழியர்களும் இப்போது ஆபத்தில் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா தொற்று நோயாளியை காப்பாற்ற பங்களிக்கிறார்கள் .
விசேட வைத்தியரிடமிருந்து சுத்திகரிப்பு தொழிலாளர் வரை எவரும் எந்த நேரத்திலும் வைரஸால் பாதிக்கப்படலாம் .
சுகாதாரத்துறையில் அவர்களின் சேவையை குறைத்து மதிப்பிடுவது நியாயமில்லை .
நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்த தருணத்திலிருந்து, நோயாளிகளை குணப்படுத்துவதில் அனைத்து சுகாதார ஊழியர்களும் ஒன்றுபட்டனர் .
கூட்டு சங்கிலி போன்று இணைக்கப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களில் ஒரு பகுதி மட்டுமே அகற்றப்பட்டால், மற்ற அனைத்து சேவைகளும் பலவீனமடையும் .
சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சுகாதார சேவையின் ஒரு பிரிவுக்கு எந்த சலுகைகளும் இல்லை .
நாம் அனைவரும் ஒரே நாட்டின் சம குடிமக்கள். தவறு எங்கிருந்தாலும், தரமான சேவையை வழங்க அதை சரிசெய்ய வேண்டும்.
ஏனென்றால், அனைத்து சுகாதார ஊழியர்களும் காப்பாற்றப்பட்டிருந்தால், நீங்கள் எங்கள் அனைவரையும் பாதுகாப்பீர்கள்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …