Breaking News

யாழில் வாழைக்குலை விற்றவரையும் விட்டுவைக்காத பொலிசாரிற்கு நடக்க போவது என்ன

யாழில் ஊரடங்கு நேரத்தில் வாழைப்பழங்கள் விற்பனை செய்தார் எனும் குற்றச்சாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரையும் அவரிடமிருந்து கைப்பற்றிய வாழைப்பழத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிசார்  அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை யூலை மாதம் வழங்கி, பிணையில் விடுவித்துள்ளார்.

அவரிடமிருந்து மீட்கப்பட்ட சான்று பொருளாக குறிக்கப்பட்டுள்ள இந்த வாழைக்குழை யூலை மாதம் வரை பொலிசார் பாதுகாத்து வைப்பார்களா என்பதே தற்போதுள்ள கேள்வி?
மன்றின் அனுமதியின்றி சான்று பொருளை பொலிஸாரால் அழிக்க முடியாது.
யூலை மாதம் எதனை சான்று பொருளாக பொலிஸார் மன்றில் பாரப்படுத்தப்படுத்த போகிறார்கள் ? காய்ந்து போன வாழைத்தாரையா ? அப்படி காட்டினால் மன்றில் இதையா விற்க வைத்திருந்தார் ? என்ற கேள்வி வருமே??
எது எப்படியோ பூட்டி இருக்கும் கடையை திறக்க சொல்லி ஓசி சிகரேட் வாங்கும் பொலிசாரிற்கு அந்த வாழைப்பழ வியாபாரி மன்றில் குற்றத்தை ஏற்காமல் வழக்கு நடாத்தினால் , விளக்கம் செம fun ஆ இருக்கும் என்பது நிச்சயம்