Breaking News

முல்லை மருத்துவரின் விபரீத ஆசை!! சிகிச்சைக்கு வந்த பெண் மீது துஸ்பிரயோக முயற்சி..!

சிகிச்சைக்கு சென்ற பெண்ணுடன் தகாதமுறையில் நடக்க முயற்சித்த மருத்துவா் ஒருவர் மீது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா் என தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு சென்ற பெ ண் மீது அங்கு பணியாற்றும் மருத்துவா் ஒருவா் தகாதமுறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளாா்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்புரைக்கமைய கொழும்பு சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பன முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

நிர்வாக நடைமுறைக்கு அமைவாக, முதல்கட்ட விசாரணையின் பின்னர்
கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *