Breaking News

21 நாட்கள் முற்றுகையில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட தாவடிக் கிராமம்

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை முழுமையாக முடக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி தாவடிக் கிராமத்திலிருந்தே இனம் காணப்பட்டிருந்தார்.
இந்த கிராமம் சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தில் இருந்து யாரும் வெளியேற மற்றும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று காலை குறித்த முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.
தாவடிக் கிராமம் முற்றாக விடுவிக்கப்படுவதுடன், வடக்கு மாகாணத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 300 இற்கும் மேற்பட்டவர்களும் இன்று திங்கட்கிழமை கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …