Breaking News

யாழில் கொரோனா தொற்று சந்தேகம்!! எட்டு பேர் அனுமதி!! நால்வரின் முடிவுகள் வெளியாகின

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தாவடிப் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண், உரும்பிராய், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் , யாழ் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வரின் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என வெளியாகியுள்ளதாகவும், எனையவர்களின் முடிவுகள் சில மணிகளில் வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.