Breaking News

ஊரடங்கு நேரத்திலும் அசுர வேகம்!! இரு இளைஞர்கள் படுகாயம்!!- படங்கள்

முல்லைத்தீவு விசுவமடு தேக்கங்காட்டு பகுதியில் கயஸ் வாகனத்துடன் அதி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயப்பட்டவர்கள் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளே விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அதி ஆபத்தான வளைவுகள் காணப்படுகின்றமையினால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துத் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.