Breaking News

ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு!! டிலானியின் வலைக்குள் சிக்கியவர்கள் யார்??

கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் இளைஞர்களை மடக்கி பணம் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தனது கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாரதி இளைஞனுடன் குடும்பம் நடத்தும் அவர், அண்மைய சில நாள்களில் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்புகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த டிலானி என்ற பெண்ணே இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது கணவர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாரதியுடன் டிலானி குடும்பம் நடத்துகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு குடும்பஸ்தருடன் குடும்பம் நடத்திய டிலானி, தற்போது சாரதியுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
டிலானியும் போதைப்பொருள் பாவனையாளர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பெண் கொழும்பில் பல்வேறு பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் குடு போதைப்பொருள்களை விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கும் காவல்துறையினர், பல்வேறு முறைப்பாடுகளுடன் தேடி வருவதாகக் குறிப்பிட்டனர்.
காவல்துறையின் சிலருக்கும் டிலானியுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ள காவல்துறையினர், கொழும்பு பெருங்குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் இந்த முறைப்பாடுகளைக் கையளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்ல கொழும்பு சென்று தங்கியிருக்கும் இளைஞர்களை தமது வலைக்குள் விழுத்தும் டிலானி, பெரும் பண மோசடிகளில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளபோதும் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தச் செய்தியில் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், மற்றொரு செய்தியில் மேலும் விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைக்கப்படும்.