Breaking News

கொரோனா வதந்தி!! மேலும் ஒருவர் உயிரிழப்பு!

அனுராதபுர சிறைச்சாலைக்குள் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் காயமுற்ற மேலும் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்தார்.
இதனுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையை உடைத்து தப்பியோட முயற்சித்ததால் ஏற்பட்ட பரபரப்பில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏற்கனவே ஒரு கைதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று கைதிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுருந்தனர்.
அவற்றில் ஒருவரே சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
தற்போது நிலமை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் சுமுக நிலையிலுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …