Breaking News

அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான ஒருவரை இனங்கண்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் கொஸ்தா தெரிவித்தார்.
குறித்த கொரொனா தொற்றுக்கிலக்கான நபர் ஜயந்திபுர, வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே கொரொனா வைரஸ் தொற்றுக்கிலக்காகியுள்ளதாகவும், இவர் ஹபரன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் ஜயந்திபுரவிற்கு சென்ற நிலையில் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம்(21) கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் கொரொனா வைரஸ் தொற்றுக்கிலக்காகியுள்ளதாககவும் கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்ததோடு, இன்று(21) மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு கொரொனா மத்திய பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 21) சனிக்கிழமை அநுராதபுரம் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 77பேர்) அதிகரித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 235 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 22 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 800 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …