Breaking News

யாழ் போதனா வைத்திய சாலைக்குள் இளைஞர் குழு அடாவடி!! ஊழியர்கள் மீது தாக்குதல்!! பொலிசாரால் முடியாமல் அதிரடிப்படை குவிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“அச்சுவேலி – தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது . எனினும் நேற்று வியாழக்கிழமை இரவு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர், உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 15பேர் கொண்ட  குழு ஒன்று அங்கு பணியாற்றும் சிரேஸ்ட மருத்துவர்கள், மற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதோடு, இரண்டு வைத்தியர்களிற்கு உயிர் அச்சுறுத்தல் விட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் , மருத்துவ சேவையாளர் ஒருவருக்கு அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட பொலிஸார் அங்கு செல்வதற்குள் அடாவடியில் ஈடுபட்டோர் நோயாளியின் BHT மற்றும் மருத்துவ குறிப்புக்களை எடுத்துக் கொண்டு மதில் பாய்ந்து தப்பித்துள்ளனர்.

தப்பி சென்றவர்களை விரட்டிப் பிடிக்க அதிரடிப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. துரத்திச் சென்ற அதிரடிப்படையினர் இருவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை , தப்பிச் சென்ற மற்றையவர்களையும் கைது செய்யுமாறும்  தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அதுவரை பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்றும் பாதிக்கப்பட்ட வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை பணி புறக்கணிப்பில் ஈடுபட வைத்தியசாலை பணியாளர்கள் முயன்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *