Breaking News

கொரணா வைரசும்.. யாழ் போதனா வைத்தியசாலையும்.. அதிர்ச்சி தகவல் இதோ

இத்தகவலானது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை என்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த வைரசை இனம் காணும் பரிசோதனை உபகரணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், சிகிச்சை எனும் பெயரில் யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் முன் எச்சரிக்கை நோக்குடனும் சுகாதார துறையை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்குடனும் பதியப்படுகின்றது.
நன்றி புதுமை Fm
உலகளாவிய ரீதியில் அனைவரையும் பீதி கொள்ள வைத்துள்ளது இந்த கொரணா. இதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திண்டாடும் நிலையில் கொரணாவை வாங்கி விற்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையின் உயர் மட்ட அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும் அழகினை இங்கே தருகின்றோம்.
ஒரு நபர் virus தொற்றிற்கு உள்ளாகியுள்ளாரா என அறிந்து கொள்ள அவரது குருதி மாதிரி மற்றும் மூக்கு தொண்டை பகுதிகளில் இருந்து பெறப்படும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக பயன்படும்.
இதன் முடிவினை பெற யாழில் இருந்து அனுராதபுரத்திற்கு கிருமி தொற்றுள்ள மாதிரியானது நோயாளர் காவுவண்டியூடாக அனுராதபுரம் அனுப்பப்படுகின்றது.
அங்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தால் கொழும்பிற்கு அனுப்பி பரிசோதிக்கப்படுகின்றது.
இதற்காக ஒரு வாகனத்துடன் இருவர் தினமும் பயணிக்கின்றனர்,
மேலும், இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அனுமதிக்கப்படும் நபர் தொற்றுக்குள்ளானவரா என முடிவினை பெற கால தாமதம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது,
இவ்வாறான சூழ்நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் என பல நபர்கள் அனுமதிக்கப்படும் போது அவர்களிற்கு என்ன நடக்கின்றது என நாம் அறிய முற்பட்ட போது அவர்கள் அனைவரும் சாதாரண விடுதி அமைப்பை போன்ற ஒரு கட்டிடத்தில் போடப்பட்ட கட்டில்களில் விடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு இவர்கள் அனைவரும் பயன்படுத்த பொது குளியல் அறை மற்றும் மலசல கூடமே பாவானைக்குள்ளமையும் அதிர்ச்சியை அழித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் தொற்றுக்குள்ளானவர் என்று முடிவு வருவதற்கு முன்னர் அவ் விடுதியில் உள்ள ஏனையவர்களிற்கும் இவர் கிருமியை பரப்பி இருப்பார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
மேலும், குறித்த விடுதியில் பணியாற்ற ஒவ்ஒரு நாளிற்கும் இரு தாதியர்கள் அதாவது பகல் ஒருவர் இரவு ஒருவர் என பணிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெவ்வேறு விடுதிகளில் பணியாற்றி கொண்டிருக்கும் தாதியர்கள். இவர்கள் தமது கடமை முடிய மீண்டும் தங்களது விடுதியில் கடமைபுரிய செல்கின்றனர்.
அதாவது, கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்காக என எந்த தாதியர்களையும் சிறப்பாக தெரிவு செய்யப்படவில்லை என்பது அப்பட்டாமான உண்மை. இது தாதியர்களை மட்டுமல்ல வைத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் என அனைவரையும் சாரும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சாதாரண விடுதிகளில் கடமை புரிந்தவர்கள் கொரோனா விடுதிக்கு கடமை செய்தபின் மீண்டும் தனது விடுதியில் கடமை புரிவது என்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதை படித்த சமூகம் அறியாமல் இல்லை.
இது திட்டமிட்டு கொரோனாவை சாதாரண நோயாளிகளிற்கும் பரப்பும் செயற்பாடே ஆகும்.
மேலும், பராமரிப்பாளர்கள் அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு கவசங்கள் என்பன சொற்ப அளவே காணப்படுவதாகவும், சாதாரண குருதி பரிசோதனைகளை செய்வதற்கே மருத்துவ ஆய்வுகூடம் தயார் நிலையில் இல்லை எனும் அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
மேலும் இவ்வாறு பராமரிப்பு முடிந்து சாதாரண விடுதிகளில் கடமைக்கு சென்ற ஊழியர்களை சில உயர் அதிகாரிகள் கடமை செய்யவிடாது வெளியேற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
ஒருவரை தொற்றுக்குள்ளானவர் என வைத்துக்கொண்டால் அவரை தனிமைப்படுத்தி தனி அறை போன்ற அமைப்பை ஏற்படுத்திஅனைத்து வசதிகளையும் வழங்கி பராமரிப்பதே சாலச் சிறந்தது.
அவ்வாறிருக்க தொற்றை உறுதிப்படுத்தவே பல மணிநேரம் தேவைப்படும் போது தோற்று இல்லாமல் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர் நிலை தான் என்ன??

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …