Breaking News

யாழில் அப்பாவி முதியவரின் உயிரைப் பறித்த விபத்து!!

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் நேற்று (08.02.2020) நண்பகல் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

பண்டத்தரிப்பு – வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே சம்பவத்தில் உ யிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உணவகத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியை ஓட முற்பட்ட முதியவரை எதிரே வந்த உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

அத்துடன் உழவு இயந்திரம் சம்பவ இடத்திலிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்தது இதன்போது கடையில் இருந்த பெண் ம யிரிழையில் உயிர் தப்பினார்.
சம்பவத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …