Breaking News

இளம் பெ ண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்றா?? அதிர்ச்சியில் கண்ணிற்கு போட வேண்டியதை மூக்கிற்கு போட்டார் முதல்வர் – படங்கள்

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவை சேர்ந்த 24 வயதுடைய குறித்த யுவதி சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார். எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கப்பட்டு, வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா? என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக யாழ்போதனா வைத்திய சாலை தகவல்கள் ..
கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனாநந்தா தெரிவித்தார்.

“அத்துடன் இது தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை. குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் நாங்கள் அவருக்கு முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றோம்.

அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …