Breaking News

இரவோடு இரவாக யாழ் போதனா வைத்திய சாலையை சுற்றி குவிந்த இளைஞர்கள் – படங்கள்

யாழ் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் யாழ் மாநகர சபையால் இன்றிரவு (18)பாரிய சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினர் குறித்த வடிகால்களால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார பிரச்சனைகள் வருவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

யாழ் மாநகர சபையின் ஆணையாளருக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் எம்.பி பணிப்பு விடுத்தார்.

இதற்கு அமைவாக இன்று இரவு யாழ் மாநாகர சபையினரால் சுத்திகரிப்பு பணி இடம்பெற்றது.