Breaking News

ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி உருவாகும் ’தலைவி’ !! அப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி – படங்கள்

ட்விட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்ட புதிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி இயக்குநர் விஜய் ’தலைவி’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஸ்டைலிஸ் வில்லன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 2015-ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்திற்கு பிறகு வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்ற லாஜிக் திரையுலகில் வலம் வர ஆரம்பித்தது.
இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அதில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் ஜெயலலிதாவின் தோற்றத்தோடு ஒத்திருக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ட்விட்டரில் நியூ லுக் புகைப்படங்களை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த எனது புதிய லுக் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.
இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, சாய்லிஷ் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஃபோட்டோ இரண்டு வெளியாகி உள்ளது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …