Breaking News

மாணவியின் விபரீத முடிவு!! பொலிசார் முன்னிலையில் தாயார் தீக்குளிப்பு!! யாழில் சம்பவம்

யாழ் கொக்குவில் பகுதியில் விபரீத முடிவை எடுத்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி வயது 20 என்று போலீஸார் தெரிவித்தனர்.
மிகவும் வறுமைப்பட்ட இந்த குடும்பம் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வன்னிப் பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியில் வந்து மீளக்குடியமர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். தந்தை இல்லாத நிலையில் தாயாரும் சகோதரி ஒருவரும் சகோதரன் ஒருவருடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் உறவினர் ஒருவருடைய மரண நிகழ்விற்காக தாயாரும் சகோதரர்களும் சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் பேத்தியுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு காதலுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.
தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத பேத்தியார் , வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் விபரீத முடிவால் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த வேளை, மன விரக்தியில் மிகவும் சோகமாக காணப்பட்ட தாயார் தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் அறையினை பூட்டி விட்டு அவரும் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தாய் தீயில் எரிவதை கண்ட யாழ்ப்பாணம் பொலிஸார், அறையின் கதவினை உடைத்து தீயினை கட்டுப்படுத்தியதுடன், உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான தாயையும் மீட்டு அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட மகளும் அதே வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றமை கொக்குவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவி மிகவும் திறமையானவர் என்றும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவி எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் தனது காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே இவ்வாறு விபரீத முடிவை எடுத்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்ற 20 வயது இளைஞன் நீண்டகாலமாக காதலித்து வந்து திருமணம் செய்வதாக கூறிய நிலையில் ஏமாற்றப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …