Breaking News

யாழ் மருத்துவமனையில் ஆண் தாதியின் தில்லாலங்கடி!! அதிர்ச்சி தகவல்கள் இதோ

யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு ஒன்றில் பொறுப்பு தாதியாக கடமையாற்றும் ஆண் தாதிய உத்தியோகஸ்தர் ஒருவர் பல மில்லியன் ரூபா பண மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பொறுப்பு தாதிய உத்தியோகஸ்தர் வேலை நேரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் வோட் மாஸ்டராக அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வருகிறார்.
தனக்குக் கிழ் கடமையாற்றும் மருத்துவ தாதிகளை கவர்ந்து கொள்ளும் நோக்கில் தனது நையாண்டிக்கு இடம் கொடுக்கும் பெண் தாதியரை வைத்து பல மில்லியன் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட பெண்தாதிகள் பல வருடமாக அவசர சிகிச்சை பிரிவில் வேலை செய்வதாகவும் மேலதிக நேரம் வேலை செய்வதாக பதிவேட்டில் பதியபட்டு கை எழுத்தும் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் குறித்த பெண் ஊழியர் குறித்த நேரத்தில் கடமையில் இருக்காது தனது வீட்டிற்கு சென்றுவிடுவார்.
மாதமுடிவில் குறித்த பெண் தாதியர் பல 100 மணித்தியாலம் ஓவரைம் செய்ததாக சம்பளம் வரும்.குறித்த பணம் பின்னர் பங்கு போடப்படுவதாககவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கு கைஒப்பம் இடப்படும் இடத்தில் இருக்கும் உத்தியோகஸ்தர்களும் உடந்தையாக இருந்திருக்க கூடும் என மூத்த தாதிய உத்தியோகஸ்தர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதி கடமையில் இருக்கும் உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை சரிவர செய்கின்றனரா என பார்வையிடுவதற்காக பல உத்தியோகஸ்தர்களிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தமது கடமைகளை சரிவர செய்யாமல் ஏசிக்குள் ஓசியில் இருந்துவிட்டு போகும் காரணத்தினால் இவ்வாறான தவறான நடவடிக்கைகள் இன்னும் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
குறித்த நேரத்திற்கு முன்பாக கடமைக்கு வந்து பராமரிப்பு தொடர்பான Handing over , Taking over என்பன எதுவுமே இல்லாமல் தாதியர்கள் வெளியேறுவதுவும் குறித்த நேரத்திற்கு வரவேண்டிய உத்தியோகஸ்தர் சுமார் 45 நிமிடங்கள் பிந்தி வந்தாலும் அவரிற்கான சலுகையாக உரிய நேரத்திலே கை ஒப்பம் இட அனுமதிக்கப்படுவதாகவும், இதனாலேயே நோயாளியை தனியே விட்டு இவர்கள் வெளியேறுவதாகவும் தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் போதுமான தாதியர் இன்மை, மற்றும் உரிய பராமரிப்புக்கள் கிடைக்கப்பெறாமையினால் பல நோயாளர்கள் பரிதாபகரமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மருத்துவ தாதி ஒரு நோயாளியை மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் பராமரிக்க வேண்டும் என்பது மருத்துவமனை நியதி.
ஆனால் இந்த நியமனங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த மோசடிகளை வெளிக்கொண்டு வந்தால் உடனடியாக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு நோயாளிகளின் உயிரோடு இவர்கள் விளையாட கூடும் எனும் கடந்தகால அனுபவங்களின் காரணமாக தமிழ் ஊடகத்துறையினரால் கவனிப்பார் அற்று கைவிட்டிருந்த நிலையில் இந்த இரகசியம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துள்ளன.
யாழ்.வைத்தியசாலையில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் நடந்தவற்றை உடனடியாக கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மோசடியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்ட்டுள்ள ஆண் தாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தாதிகள் தரப்பில் இருந்தும் – அரசியல்வாதிகளிடம் இருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆண் தாதியை இடமாற்றம் செய்யவேண்டாம் என்று தாம் மருத்துவ மனையில் சேகரித்த கையெழுத்தை 12 பேர் ஒன்றாக சென்று வைத்தியசாலை பணிப்பாளருக்கு கொடுத்துள்ளார்கள்.
வைத்தியத் துறையில் உள்ள அனைவருமே நோயாளிக்கு மாத்திரமல்ல தமது நெஞ்சுக்கும் நேர்மையாக நடக்க வேண்டிய தருணம் இது. பிழை செய்தவனை விட பிழை செய்ய தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …