Breaking News

நடிகர் விஜய், பிரபல தேர்தல் ஆலோசகர்கதிகலங்கி நிற்கும் தமிழக அரசியல்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் வருமானவரித்துறை அழைத்துச்சென்று அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். விஜயின் வீட்டில் இரண்டு நாளாக சோதனை நடைபெற்றது.

விஜய்க்கு நெருக்கடி மேல் நெருக்கடி வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் படப்பிடிப்பு பிறகு நடிகர் விஜய் வேண் மீது ஏறிநின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படம் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து திமுக தலைவர் விஜய் என்ற ஹேஸ்டேக்கும் வைரலானது. இதனால் அரசு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி என மூவரும் இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் பிரசாந்த் கிஷோர், விஜயிடம் பேசுவது போல உள்ளது.

ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்ற வாசகத்துடன் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *