Breaking News

பாழடைந்த கிணற்றுக்குள் தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவின் சடலம்! யாழில் அதிர்ச்சி சம்பவம்!

புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்து என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தை பிறந்து 2 நாள்கள் இருக்கும் என சந்தேகபடும் நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுகிறது. செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.

எனினும் யூரியா பை தனியாகவும் சடலம் தனியாகவும் காணப்பட்டது. நேற்றுக் காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சிசுவின் சடலம் தொடர்பில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …