Breaking News

இணையத்தை கலக்கும் தனுஷின் மகன்கள் புகைப்படம் உள்ளே

கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நடிகர் தனுஷ். அதன்பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைகண்டேன், திருவிளையாடல் என தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் தன்னுடைய திறமையை தற்போது வெளிப்படுத்தி கொடிகட்டி பறந்து வருகிறார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை அவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

தற்பொழுது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தன்னுடைய மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார். அந்த சிறுவர்களின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே தனுஷ் மாதிரி இருக்கீங்களே என்று புகழ்ந்து வருகின்றனர்.