Breaking News

அந்தரத்தில் தொங்கும் வான்!! தீவிர விசாரணையில் பொலிசார் – படங்கள்

கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை வான் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் வானின் சாரதி மாயமாகியுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03-01-2020) மாலை ஐந்து மணியளவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், குறித்த வானினை செலுத்திய சாரதி மாயமாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வான் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வானினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை எந்த வித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்று வித்துள்ளன.
வான் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா? அல்லது வேறு ஏதும் காரணங்களினால் மாயமானாரா? என பல்வேறு சந்தேகங்களை ஏற்பட்டுத்தியுள்ளன.

இந்த வான் விபத்து இடம்பெற்றது தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வானில் காணப்படும் வாகன அனுமதி பத்திரத்தினையும்,பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வான் பற்றைகளில் சிக்கியிருப்பதனால் பள்ளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சாரதியில்லாததனால் அதனை தடுப்பது சிக்கலாக காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …