Breaking News

இலகுரக விமானம் விபத்து!! நால்வர் பலி! ஒருவர் படுகாயம் – படங்கள்

ஹப்புத்தளை பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகுரக விமானமொன்று ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணித்த நால்வர் உயிரழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

வீரவில பகுதியில் இருந்து பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது என்று விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்ம விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவர் விமானிகள் என்றும் மற்றைய இருவர் கண்காணிப்பாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விமான விபத்தின் போது, அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட விமானம் வீரவில விமானபடை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியது.




About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …