Breaking News

போரில் பிள்ளைகளை இழந்த நிலையிலும் யாரிடமும் கையேந்தாமல் தன்னந்தனியாக உழைத்து வாழத் துடிக்கும் வீரத் தாய்…!கண்கலங்க வைக்கும் பதிவு

இது ஓர் உண்மைச் சம்பவம்… தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்…
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நேரில் கண்ட அனுபவம் இது .

”கச்சான் ஆச்சி’ என்று ஒரு தகர கூட்டில் கச்சான், ரொபி விற்று வாழ்வதற்கு போராடும் ஒர் வீரத் தாயின் கண்ணீர்க் கதையிது.
பலத்த மழை காரணமாக நான் வீதி ஓர கடை ஓரமாக நிற்கும் போது, ஆச்சி யும் ஒரு குட்டி மகளும் அந்த தகரக் கூட்டில் இருந்து மழை வெள்ளம் காரணமாக ஓடி வந்தனர்.
அப்போது மெதுவாக கதைத்தேன் ஆச்சியுடன் ..

ஆச்சிக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளையை இராணுவம் கொண்டு போய்விட்டார்கள்… மற்ற பெண்பிள்ளை போரில் மரணம்… மற்ற ஆம்பிளைப் பிள்ளை வெளிநாட்டுக்கு போய் பெற்றெடுத்த அம்மாவை, அப்பாவைக் கை விட்டுவிட்டார்!! ( தொடர்புகள் இல்லை) சொல்லும் போதே இப்படி ஆச்சியின் கண்கள் கலங்கியது …
அவரது கடைசிப் பெண் (மனநோய்) மகளை, கைவிட்டு சென்ற நிலையில் ஆச்சி அந்தப் பெண் குழந்தையை தாய் போல் பார்த்து வருகிறார்..

அவரது கணவர்க்கு கண் பார்வை தெரியாத நிலையில், தாங்கள் கஞ்சியை குடித்தாலும், பிள்ளைக்கு சோறு கொடுத்து வளர்த்து விடுவோம் என்று மனம் தளராமல் நம்பிக்கையில் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
காணாமல் ஆக்கபட்ட தனது மகன் கிடைக்க மாட்டாரா என்று, பெரும் ஏக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்.
யாரிமும் கை ஏந்தாமல் வாழ வேண்டும் என, தினமும் பாடசாலை முடியும் நேரம் காலை பதினொரு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை கச்சான் விற்று வருகிறார்.

தினமும் கச்சான் விற்பதற்காக பஸ்ஸில் வந்து செல்கிறார்(14 KM ). எவ்வாறெனினும், ஒரு நாளைக்கு லாபம் கையில் வருவது போல் தெரியவில்லை.
பத்மநாதன் பத்மராணி ( ஆச்சி ) Church பக்கம், ஊற்றுக்குளம், கிளிநொச்சி.
உறவுகளே….. உங்களால் ஏதேனும் சிறு உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள்… இவரது கணவருக்கு கண் தெரியாது சிகிச்சை காரணமாக சாவகச்சேரியில் இருக்கிறார்.இதோ அவரது தொலைபேசி – 0774537812

ஆச்சி தனித்து பேரப்பிள்ளையுடன் உள்ளார் . உறவுகளே…ஆச்சியுடன் நேரடியாகச் சென்று உதவுங்கள். அதுவே சிறப்பாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு;
பத்மநாதன் பத்மராணி ( ஆச்சி ) Church பக்கம், ஊற்றுக்குளம், கிளிநொச்சி.
முடியுமானவரை இந்தப் பதிவை எல்லோரும் அறிந்திட, தயவு செய்து அதிகமாக பகிருங்கள்.. ஏனெனில், நீங்கள் இந்த தாய்க்கு செய்யக் கூடிய குறைந்த பட்ச உதவி இதுவே…!

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …