Breaking News

இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை…! நீங்கள் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றிங்களா.?! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து அது தொடர்பான குற்றங்கள், இளம் பெண்கள் ஆபத்தில் சிக்குவது போன்ற பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை தொடர்ந்து போலி செய்திகளை கண்டறிவதற்காக குழுக்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், இன்ஸ்டாகிராம் போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள “See Why” எனும் அம்சமும்,தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ள “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …