Breaking News

பேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு பலியாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 20.02.2020. நேற்று வியாழகிழமை இரவு 07மணியளவில் இடம் பெற்றதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருவதாகவும் நல்லதன்னியில் இருந்து மவுசாகலைக்கு சென்ற பேருந்தில் மவுசாகலை பகுதியில் வைத்து சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் பலியான நபர் 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்  என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மஸ்கெலியா
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 21.02.2020.இன்று வெள்ளிகிழமை பேருந்தின் சாரதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *