Breaking News

இலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை! இவரு தான் புருஷனாம்!! வெளியிட்ட அசத்தல் புகைப்படம்.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியல் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சரண்யா.

முதலில், செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த நடிகை சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவருடைய திறமையால் ஏராளமான ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார்.

இவர், கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து வந்த சரண்யாவுக்கு, கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, இவரது கணவர் லண்டனில் வசித்தாலும் சென்னையில் குடியேறிய சரண்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது, பழைய பாடல்கள் மீது தீரா காதல் கொண்ட சரண்யா அழகாகவும் பாடவும் செய்வாராம்.

இந்த நிலையில் காதலர் தினத்தை அவருடைய கணவருடன் கொண்டாடியுள்ள சரண்யாவின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *