Breaking News

யாழில் டிப்பர் ஒன்று மடக்கி பிடிப்பு!! 100 கிலோ போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது டிப்பர் வாகனம் ஒன்றிலிருந்து 100 கிலோ கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் காரைநகர்- யாழ்ப்பாணம் வீதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறித்துள்ளனர்.

இதனை அறிந்த டிப்பர் வாகன சாரதி நடு வீதியில் நிறுத்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளார். குறித்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் 100 கிலோ கஞ்சா போதைப் பொருளை மீட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் போதைப்பொருள்களுடன் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *