Breaking News

முல்லையில் பல லட்சம் ரூபா பெறுமதியான மரக்கடத்தல் முறியடிப்பு !

முல்லைத்தீவு வன திணைக்களத்தால் கடந்த ஒரு மாத கால பகுதியில் 13 இலட்சம் பெறுமதியிலான சட்டவிரோதமாக வெட்டிச் செல்லப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்தி செல்லப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்றையதினம் (04) முல்லைத்தீவு வள்ளிபுனம் காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோதமாக வெட்டி செல்லப்பட்ட 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியிலான பாலை மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதன்போது மரம் கடத்தியவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் வாகனத்திலிருந்து 132500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இன்றையநாள் வரையான காலப்பகுதியில் 17 வாகனங்களுடன் 13 இலட்சம் பெறுமதியிலான மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதில் 07 வழக்குகள் இன்று வரையிலான நாட்களில் நிறைவடைந்துள்ளது . இந்த வழக்குகளுக்காக இரண்டு இலட்சத்து ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி கௌதமன் தெரிவித்துள்ளார் .

குறைந்தளவான ஆளணி வழங்களுடன் முல்லைத்தீவு வன திணைக்களம் இயங்குகின்ற போதிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *