Breaking News

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து கணினியில் பணியாற்றுபவர்கள், கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னைக்கு பல பேருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று பர்மிஷன் கொடுத்துவிட்டதால், எப்படி முறையாக அமர வேண்டும் என்று தெரியாமல் பணியாற்றி பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றாலோ, அமர்ந்திருந்தாலோ, இதயத்திற்கு செல்ல வேண்டிய கெட்ட இரத்தம் காலிலேயே தங்கிவிடும்.

இதற்கு அடிக்கடி எழுந்து நடத்தல், காலை அசைத்துக்கொண்டு ரிலாக்ஸ்சாக இருத்தால் போன்றவற்றை செய்து வந்தால், வெரிகோஸ் வெயின் போன்ற நரம்பு சுருளும் பிரச்சனை வராது.

ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், உடல் இயக்கத்துக்கு செலவழிக்கும் சக்தி குறைந்துவிடும். உணவின் மூலம் உண்டாகும் ஆற்றல், வயிற்றில் கொழுப்பாக மாறி சேமிக்கப்படும்.

அதான் தொப்பை வருவதற்கும் காரணம். கை, கால் அசைக்காமல் கண்ணுக்கும், விரலுக்கும் மட்டுமே வேலை கொடுப்பதால், தசைபிடிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து உட்கார்ந்ததால் கூட போதும்.

சில நேரங்களில் கழுத்துக்கு கீழே வலி உண்டாகும், ஒரு சிலருக்கு முதுகு வீங்கியது போல உணர்வு உண்டாகும். அந்த மாதிரி இருந்தாலே நீங்கள் உட்காரும் முறை சரியில்லை, கணினியை பார்க்கும் கோணம் சரியில்லை என்று அர்த்தம். மேலே உள்ள படத்தில் காட்டியது படி அமர்ந்ததால், பெருமளவு பாதிப்பை குறைக்க முடியும்.

About kalaiselvi

Check Also

தோப்புக்கரணம் போடுவதால் கரு உருவாவதில் சிக்கல் வருமா? விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக வைக்கக்காரணம் என்ன?

“ஹோம்வொர்க் முடிக்கலயா.? கிளாஸ் வெளிய போய், 20 தோப்புக்கரணம் போட்டு வா” என்று கேட்ட நம் காதுகளுக்கு, தோப்புக்கரணம் என்றாலே, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *