Breaking News

ஒரு மனைவி தன் கணவரிடம் எப்போதுமே காண்பிக்காத ஒன்று என்ன தெரியுமா? உள்ளிருக்கும் ட்விஸ்ட்!

மனிதராக பிறந்த எல்லோருக்குமே ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். பெண்களுக்கு நகை, ஆடை தான் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தாண்டி அவள் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே. சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அது கிடைக்காமல் போனால், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும், அதை ஒருபோதும் வெளியே காட்டுவதில்லை பெண்கள்.

ஒரு பெண் துவண்டு போகும் நேரங்களில், ஆறுதல் தேட கணவனின் தோளினை எதிர்பார்க்கும். எப்போது வருவார் என்று மனம் ஏங்கித்தவிக்கும்.

வீட்டிற்கு வர சில நிமிடங்கள் தாமதம் ஆனாலும், எங்கே? எங்கே? என்று கண்கள் அலைமோதும். அந்த நேரத்தில் அவள் அடையும் ஏமாற்றத்தை யாராலும் உணர முடியாது. அதனை வெளியிலும் காட்டிக்கொள்வதில்லை.

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் மற்றும் அவர்கள் சம்மந்தப்பட்ட ரகசியங்களையும் வெளியில் சொல்லாமல் மறைப்பார்கள்.

பெண்களை பொறுத்தவரை கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாத மேலும் விஷயங்கள் உள்ளன. இல்லற வாழ்க்கையின் ஆரம்ப வலி முதற்கொண்டு குழந்தை பெற்றெடுக்கும் வரை எத்தனை வலி வந்தாலும், வெளியில் காட்ட மாட்டார்கள்.

புதிதாக திருமணமாகிச் சென்ற வீட்டில், புது இடம், புது மனிதர்கள், கேட்கக்கூடாத சுளீர் வார்த்தைகள் என்று எத்தனை துன்பங்கள் அனுபவித்தாலும், கணவன் முன் முகம் காட்டும் போது, புன்னகையை மட்டுமே வெளியில் கட்டுவார்கள். குடும்பத்திற்காக சுமக்கும் பொறுப்புகளினால், எத்தனை உடல் உபாதைகள் வந்தாலும், கணவனிடம் காட்ட மாட்டார்கள்.

கணவன் கூட சில நேரங்களில் மனைவியை விட்டுக்கொடுத்து பேசலாம். கிண்டல் என்று சொல்லிக்கொண்டு அவள் தரத்தை தாழ்த்திப்பார்க்கலாம். ஆனால் மனைவி ஒரு போதும் கணவனை விட்டுக்கொடுத்து பேச மாட்டாள்.

என் கணவன் தான் உலகில் உயர்ந்தவர் என்பது போல சிந்தனை இருக்கும். அதே பெண்ணை விட்டுக்கொடுத்து பேசும் போது, அவள் அடையும் ஏமாற்றத்தை வெளியில் காட்டமாட்டாள்.

இறுதியாக, எதையும் தாங்கும் தனது மனவலிமையை வெளியே தெரியுமாறு காட்டிக்கொள்ளமாட்டார்கள். மனதில் எவ்வளவு தான் சோகம் இருந்தாலும், தான் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் சித்தரித்துக்கொள்வார்கள்.

ஆக மொத்தம், பெண்கள் என்றால், வழிகளில், பல வலிகளை தாண்டி பயணித்து வரும் தேவதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *