Breaking News

வீடுபுகுந்து குடும்ப பெண்ணை நிர்வாணமாக கட்டி அணைக்க முயன்ற சிறைக் காவலரிற்கு நேர்ந்த கதி – படங்கள்

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08.11.2019) 11.30 மணியளவில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.
வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு மதிலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணுக்கு முன்பாக தான் அணிந்திருந்த உடைகளை க ழற்றிவிட்டு நிர்வாணமாக கட்டி அணைக்க முயன்றுள்ளார்.
இதன் போது குறித்த பெண் கூச்சலிட்டதினை அடுத்து அயலவர்கள் குறித்த நபரை மடிக்கி பிடித்து தாக்குதல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெளரிநாதன் புண்ணியமூர்த்தி என்கின்ற சிறைக்காவலரே மேற்படி விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …