Breaking News

தந்தை , மகனை அடி த்து கொ ன்ற பொலிசார்!! தூத்துக்குடி அருகே நடந்த சோகமான சம்பவம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சேர்ந்து கைபேசி விற்பனையகம் நடத்தி வந்தார்கள்.

கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டி தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து திரு. ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளார்.

இதனால் கோபமடைந்த காவல்நிலைய எஸ்ஐக்கள் அவரது கண் முன்னாலேயே, அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனை தடுக்க கேள்வி கேட்ட பெனிக்ஸையும் பலமாக அடித்து, இருவரையும் இரவோடு இரவாக கோவில்பட்டி சிறை சாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சம்பந்தமேயில்லாமல் கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஏன் அனுப்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் தெரியாத நிலையில் இன்று காலை தந்தை மகன் இருவரும் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

இதனை அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் போராட்டம் செய்ய ஆரம்பித்தவுடன், வழக்கம் போல இரண்டு காவல்துறை அதிகாரிகளை ஆயுத படைக்கு மாற்றம் செய்து ‘மிக கடுமையான தண்டனையை’ உடனடியாக வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக காவல்துறை

ஏற்கனவே கொரோனாவால் ஏகப்பட்ட சிரமங்களில் தவிக்கும் மக்களுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது

காவல்துறையின் அதிகார திமிரால் உயிரிழந்த அப்பாவி தந்தை மகன் இருவருக்கும் கண்ணீர் அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *