Breaking News

இவரை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களுடன் நெருங்கிய உறவை பேணிய வெளிநாட்டவர் ஒருவரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர் மாலைத்தீவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 30 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு வரையப்பட்ட ஒரு புகைப்படம் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் தொடர்பான தகவல்கள் தெரியுமாயின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 2326936 என்ற இலக்கத்திற்கும் அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் இலக்கமான 071 8591774 என்ற இலக்கத்திற்கும் அறியத்தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …