Breaking News

மிருசுவில் பகுதியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் சந்தியில் இன்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றொருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்

நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தற்போது கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *