Breaking News

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!! முகமாலையில் பயங்கரம்

முகமாலை பகுதியில் மணல் ஏற்றியவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் அங்கிருந்து மீட்க்கப்பட்டு பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தன நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டவருக்கு கடந்த ஒரு மணி நேரமாக சிகிச்சை வழங்கப்படவில்லை என்று அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள இளைஞன் , பளை கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞன் என தெரியவருகின்றது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *